கடை எழு வள்ளல்களில் ஒருவனான பாரி சேர சோழ பாண்டிய மன்னர்களால் கொல்லப்பட்டான். அவன் மகள்களான அங்கவை மற்றும் சங்கவை இருவருக்கும் திருமணம் முடித்து வைக்க வேண்டிய பொறுப்பு ஒளவைக்கு ஏற்பட்டது. மூவேந்தர்களுக்கு பயந்து இத்திருமணத்தில் யாரும் பங்கு கொள்ளாமல் இருந்தனர். திருமண ஓலை எழுதுவதற்கு ஆள் தேவை பட்டது. யாரும் எழுத வராததால் விநாயகரை அழைத்தார் ஒளவையார்.விநாயகர் எல்லாம் வருவாரா என்று ஒருவர் கேலி செய்ய அப்பொழுது எழுதிய செய்யுள் ஒரு கை இரு மருப்பு மும் மதத்து நால் வாய்க் கரி உருவக் கங்காளன் செம்மல் - கரி முகவன் கல்யாண ஓலை கடிது எழுத வாரானேல் தன் ஆண்மை தீர்ப்பன் சபித்து ஒரு கை - தும்பிக்கை இரு மருப்பு - யானை தந்தங்கள் மும்மதம் - சைவம், சாக்தம், கணபாத்யம் ஆகிய மூன்று மதங்களுக்கும் பொதுவானவர் நால் - நான்ற - தொங்குகின்ற கரி - யானை கரி முகவன் - யானை முகத்தோன் கடிது - விரைந்து இப்பாடலில் ஒன்றில் இருந்து நான்கு வரை ஒரே வரியில் விநாயகரை வர்ணிப்பது ஒளவையின் திறமைக்கு சான்றாகும். பாடலின் பொருள் இதுவாகும். ஒற்றைக்கையும், இரட்டைக் கொம்புகளும், மூன்று மதங்களும்...