Skip to main content

தமிழுக்கு பணிந்த இறைவன்

கடை எழு வள்ளல்களில் ஒருவனான பாரி சேர சோழ பாண்டிய மன்னர்களால் கொல்லப்பட்டான். அவன் மகள்களான அங்கவை மற்றும் சங்கவை இருவருக்கும் திருமணம் முடித்து வைக்க வேண்டிய பொறுப்பு ஒளவைக்கு ஏற்பட்டது. மூவேந்தர்களுக்கு பயந்து இத்திருமணத்தில் யாரும் பங்கு கொள்ளாமல் இருந்தனர். திருமண ஓலை எழுதுவதற்கு ஆள் தேவை பட்டது. யாரும் எழுத வராததால் விநாயகரை அழைத்தார் ஒளவையார்.விநாயகர் எல்லாம் வருவாரா என்று ஒருவர் கேலி செய்ய அப்பொழுது எழுதிய செய்யுள்

ஒரு கை இரு மருப்பு மும் மதத்து நால் வாய்க் 
கரி உருவக் கங்காளன் செம்மல் - கரி முகவன் 
கல்யாண ஓலை கடிது எழுத வாரானேல் 
தன் ஆண்மை தீர்ப்பன் சபித்து

ஒரு கை - தும்பிக்கை
இரு மருப்பு - யானை தந்தங்கள்
மும்மதம் - சைவம், சாக்தம், கணபாத்யம் ஆகிய மூன்று மதங்களுக்கும் பொதுவானவர் 
நால் - நான்ற - தொங்குகின்ற
கரி - யானை
கரி முகவன் - யானை முகத்தோன்
கடிது - விரைந்து

இப்பாடலில் ஒன்றில்  இருந்து நான்கு வரை ஒரே வரியில் விநாயகரை வர்ணிப்பது ஒளவையின் திறமைக்கு சான்றாகும். பாடலின் பொருள் இதுவாகும்.
ஒற்றைக்கையும், இரட்டைக் கொம்புகளும், மூன்று மதங்களும், தொங்குகின்ற வாயும், யானை உருவமும் கொண்டோன் எலும்பணியும் சிவனின் சிறந்த மகன் யானை முகவன்! அவன் கல்யாண நாளோலை எழுதுவதற்கு விரைந்து வாராதிருந்தான் என்றால், அவனைச் சபித்து, அவன் ஆற்றலையே போக்கிவிடுவேன்” என்பது பொருள்.

கடவுளரையும் சபிக்கும் ஆற்றல் உடையவர் உண்மைத் தொண்டர்கள். அந்த ஆற்றலைக் குறிப்பிட்டுக் காட்டுவதும் இச்செய்யுள் ஆகும். விநாயகர் ஒளவையின் வேண்டுகோளை ஏற்று விரைந்து வந்தார். திருமண ஓலையினையும் எழுதித் தந்தார்.

குறிப்பு : சிவாஜி படத்தில் அங்கவை மற்றும் சங்கவை கதாபாத்திரங்களுக்கு  உரிய மரியாதை தரப்படாததால் நாஞ்சில் சம்பத் அவர்கள் தந்தையாக நடித்த சாலமன் பாப்பைய்யாவிற்கு  கண்டனம் தெரிவித்தார். அதை ஏற்று சாலமன் பாப்பைய்யா அவர்கள் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டார்

Comments

Popular posts from this blog

ஒளவையாரும் கம்பரும்

சோழனின் அவையிலே கம்பர் பெரிதும் போற்றப்பெற்று விளங்கியவர். அரசவைக் கவிஞருள் ஒருவராக அதற்குரிய ஆடம்பரங்கள், பொன் அணிகலன்கள்  முதலியவற்றுடன் விளங்கியவர். அரசனிடம் தனிப்பட்ட செல்வாக்கும் அவருக்கு இருந்தது. அதனால், கம்பரைச் சுற்றிப் பலர் அவரைப் போற்றியபடியே இருந்தனர். அவர் எது சொன்னாலும் அதனைப் பாராட்டினர். அதன் சிறப்பை ஆராய்வதுகூட இல்லை. ஒளவையாருக்கு, கம்பரின் அந்த அளவற்ற ஆடம்பரமும், அவரைச் சுற்றியுள்ள போலி புலவர் கூட்டமும் வெறுப்பையே தந்தன. ஒரு சமயம், கம்பரின் பாட்டொன்றை மன்னன் வியந்து பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டில் சிறப்பு எதனையும் காணாத ஒளவையார், அந்த உரைகளைக் கேட்டு எள்ளி சிரித்தவண்ணம் இருந்தார். தற்செயலாக அவர் பக்கம் திரும்பிய மன்னன், தன் கருத்தை அவர் ஏற்கவில்லை என்பது  தெரிந்தது. "தங்கள் கருத்து யாதோ?” எனக் கேட்டான். அப்போது, ஒளவையார் “கவிதை ஒன்றைப் பாராட்டும்போது, அதன்கண் அமைந்துள்ள சொல் நயம் பொருள் நயம் ஆகியவற்றையே கருதுதல் வேண்டும். இங்கேயோ கம்பரின் பாட்டு’ என்பதற்காகவே அனைவரும் அதனைப் புகழ்கின்றீர்கள். அந்த நிலைமையை நினைத்து சிரித்தேன், எளிமையும் புலமை நலமு...
சைவ  சித்தாந்தம் அறிமுக உரை ========================== இது சைவ சித்தாந்தத்திற்கான அறிமுக பதிவு. வேதம் என்பது ஆரியர்களின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதத்தை குறிப்பிட்டாலும், ஆரியர்களே ஏற்று கொண்ட இன்னொரு வேதம் சைவ திருமுறை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். ஆனால் அதை தமிழ் வேதம் என்று சொல்லாமல் திராவிட வேதம் என்று சொல்லிவிட்டார்கள். நாம் தமிழ் வேதம் என்றே சொல்வோம். சைவ சித்தாந்தம் என்பது தமிழ் சைவ வேதத்திற்கு பின்னால் தோன்றியது. சமயத்தில் வேதத்தின் மூலமாக அந்தத்தை(இறைவன்) அடைதல் வேதாந்தம் சித்தத்தின் மூலமாக அடைதல் சித்தாந்தம். சித்தம் என்றால் அறிவு. சமயத்தில் பகுத்தறிவு பேசியது சித்தாந்தம். சமயத்தில் பகுத்தறிவா என்பது உங்களுக்கு வியப்பை தரலாம். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். வேதாந்தம் என்ன கூறுகிறது என்றால்   இந்த உலக உயிர்கள் அனைத்தையும் படைத்தவன் இறைவன். அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில் உள்ள பாடல் பின்வருமாறு பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே உ...

விநாயகர் போற்றி

ஒளவையார் விநாயகர் பூசை  செய்து கொண்டிருந்த பொழுது சேரமான் பெருமாள்  குதிரை மீதேறியும் சுந்தரர் யானை  மீதேறியும் கயிலாயம் புறப்படும் செய்தி அவருக்கு கிடைத்தது. ஒளவையாருக்கு தாமும் அவர்களுடன் கயிலாயம் போக வேண்டும் என்று பூசையை விரைவாக செய்ய  தொடங்கினார். ஒளவையாரின் எண்ணத்தை அறிந்த விநாயகர், ஒளவையே! அவசரம் ஏதும் வேண்டாம் அவர்களுக்கு முன்னதாகவே  உன்னைக் கயிலாயத்தில் சேர்த்து விடுகின்றேன் என்றார். விநாயக பெருமானின் அருளினை நினைந்து "சீதக்களபம்' என்னும் விநாயகர் அகவலைப் பாடினார்.தமிழ் உவக்கும் பிள்ளையார் பெருமானும் அதனைக் கேட்டு மகிழ்ந்து வாக்களித்தபடியே அவரைத் தன் துதிக்கையால் எடுத்துக் கைலாயத்திற் சேர்த்து விட்டார்.  சேரமான் பெருமாள் மற்றும்  சுந்தரமூர்த்தி சுவாமிகளும்  கைலாயம் வந்து  சேர்ந்தனர். தம்முடன் ஒளவையாரும் வந்தாரில்லையே என்ற ஏக்கம் அவர்களுக்குள்ளே இருந்தது.ஆனால்  தங்களுக்கும் முன்பாகவே  அங்கே வந்ததிருந்த ஒளவையாரைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எங்கட்கு முற்பட நீங்கள் வந்து சேர்ந்தது எவ்வாறோ? என்று கேட்டான் சேரன். அப்போது, அவன...