Skip to main content

ஒளவையாரும் சோழனும்

ஒரு சமயம் சோழன் காவிரி கரையோரத்தில் ஒரு சங்கு வாயைத் திறந்த படியே வானத்தை நோக்கியபடி இருக்கக் கண்டதும் அவன் வியப்புற்றான். அப்போது கரையோரத்து, மரத்தின் பூக்களிலிருந்து ஒரு துளி தேன் அதன் வாயில் கொட்டிற்று. அவன் உள்ளம் அதனைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தது. இயற்கையின் கருணையாகிய அரிய ஆற்றல் அவனுக்குப் புலனாயிற்று.ஆழ்கடலில் வீற்றிருக்கும் அறிவற்ற சங்கினையும் நிலத்தின் மேல் வந்து அண்ணாந்திருக்கச் செய்து, அதன் வாயில் தேன் துளியினையும் வீழச்செய்து இன்புறுத்திய பெருங்கருணை அவனை ஆட்கொண்டது. அந்த நினைவிலே திளைத்தவனாகத் தன் அரண்மனைக்குச் சென்றான். இரவெல்லாம் அந்தக் காட்சி அவன் மனத்தை விட்டு அகலவேயில்லை. மறுநாட்பொழுதும் வந்தது. சோழ அவையும் கூடிற்று. மன்னன் அவை நாயகனாக அமர்ந்திருந்தான். அப்பொழுது ஒளவையார் சோழனின் அவையுள் மெல்ல நடந்து வந்தார். அவரைக் கண்டதும் வருக! வருக! என்று வரவேற்றான் மன்னன். 'அமர்க' எனவும் சொன்னான். ஆனால் அங்கே அமர்வதற்கு இருக்கை எதுவும் இல்லாதததை  கவனிக்கவில்லை; அதுபற்றி எவரும் கவலைப்படவுமில்லை. ஒளவையாரோ நெடுந்தொலைவினின்றும் நடந்து வந்தவர்; பல நாட்களாக நடந்து சோர்ந்து போயிருந்தவர்; சோழனைக் காணவேண்டுமென்ற ஆர்வத்தின் மிகுதியினாலே தம் களைப்பையும் மறந்து உடனே சென்றவர். அவரை அவன் முறையாகக் கவனிக்காது, எவரையோ வரவேற்பது போல வருக அமர்க!' என்று சொன்னது அவருக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது. அப்போது அவர் பாடிய செய்யுள்.

கால் நொந்தேன் நொந்தேன் கடுகி வழி நடந்தேன்
யான் வந்த தூரம் எளிது  அன்று - கூனல்
கருந்தேனுக்கு  அண்ணாந்த காவிரி சூழ் நாடா
இருந்தேனுக்கு  எங்கே இடம்?

கடுகி - வதங்கி, கடினபட்டு, கடுகு போல் சிறுத்து
கூனல் - சங்கு, நத்தை

சங்கானது மிகுதியான தேனைப் பருகுவதற்காகத் தன் வாயைத் திறந்து மேல் நோக்கியபடி இருக்கின்ற வளமுடைய, காவிரியாற்றில்  சூழப்பெற்ற நாட்டிற்கு உரியவனே! நின்னைக் காணும் ஆர்வத்தாலே விரைவாக வழியினை எல்லாம் நடந்து கடந்தேன். என் கால்களும் மிகவும் நோவுற்றன. யான் கடந்து வந்த தூரமோ கடத்தற்கு எளிதல்லாத மிக்க நெடுந்தூரம் ஆகும். அங்ஙனம் வந்து நின் அவைக்கண் நின்றிருக்கும் எனக்கு, அமர்வதற்கு ஏற்ற இடம்தான் எங்கேயோ?” என்பது செய்யுளின் பொருள்.
இருந்+ தேனுக்கு  எங்கே இடம்? - சங்குக்கு தேன் குடுத்த நாட்டில் இருக்கும் எனக்கு தேன்(பரிசு) இல்லையா எனவும் கொள்ளலாம்

Comments

Popular posts from this blog

ஒளவையாரும் கம்பரும்

சோழனின் அவையிலே கம்பர் பெரிதும் போற்றப்பெற்று விளங்கியவர். அரசவைக் கவிஞருள் ஒருவராக அதற்குரிய ஆடம்பரங்கள், பொன் அணிகலன்கள்  முதலியவற்றுடன் விளங்கியவர். அரசனிடம் தனிப்பட்ட செல்வாக்கும் அவருக்கு இருந்தது. அதனால், கம்பரைச் சுற்றிப் பலர் அவரைப் போற்றியபடியே இருந்தனர். அவர் எது சொன்னாலும் அதனைப் பாராட்டினர். அதன் சிறப்பை ஆராய்வதுகூட இல்லை. ஒளவையாருக்கு, கம்பரின் அந்த அளவற்ற ஆடம்பரமும், அவரைச் சுற்றியுள்ள போலி புலவர் கூட்டமும் வெறுப்பையே தந்தன. ஒரு சமயம், கம்பரின் பாட்டொன்றை மன்னன் வியந்து பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டில் சிறப்பு எதனையும் காணாத ஒளவையார், அந்த உரைகளைக் கேட்டு எள்ளி சிரித்தவண்ணம் இருந்தார். தற்செயலாக அவர் பக்கம் திரும்பிய மன்னன், தன் கருத்தை அவர் ஏற்கவில்லை என்பது  தெரிந்தது. "தங்கள் கருத்து யாதோ?” எனக் கேட்டான். அப்போது, ஒளவையார் “கவிதை ஒன்றைப் பாராட்டும்போது, அதன்கண் அமைந்துள்ள சொல் நயம் பொருள் நயம் ஆகியவற்றையே கருதுதல் வேண்டும். இங்கேயோ கம்பரின் பாட்டு’ என்பதற்காகவே அனைவரும் அதனைப் புகழ்கின்றீர்கள். அந்த நிலைமையை நினைத்து சிரித்தேன், எளிமையும் புலமை நலமு...

ஒளவையாரின் பிறப்பு

 'ஒளவையார் ஆதி என்பருக்கும்  பகவன் என்பவருக்கும் பிறந்த மக்கள் எழுவருள் ஒருவர். பாணர்களின் வீட்டில் ஆதியும் பகவனும் தங்கியிருந்தபோது பிறந்தவர். அவர்களுடைய ஒப்பந்தப்படி, அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுவிடுமாறு பகவன் பணித்தார். ஆதி  அம்மையார்  கலக்கமுற்றார். அப்போது, அந்தச் சிறு குழந்தை தன் வாயைத் திறந்து ஒரு வெண்பாவைப் பாடியது. அதனைக் கேட்ட தாயான ஆதியும் தன் மயக்கத்தினின்றும் நீங்கினாள்; மனத்தெளிவு கொண்டாள்.குழந்தையை அவ்விடத்தேயே விட்டுவிட்டுச் சென்றனர்.அந்த ஒளவையார் குழந்தை பாடிய வெண்பாவின் பொருள் இதுவாகும்,  'உலகத்து உயிரினங்களைத் தோற்றுவித்தவன் சிவபெருமான். உயிர்கள் அதனதன் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளை அவன் கவனிப்பான். அவற்றிற்கு ஏற்றவாறு அதனதன் வாழ்வின் போக்கையும் வகுத்து நிர்ணயிப்பான். இந்த நிர்ணயம் மாற்ற முடியாதது. அதனை முறையே உயிர்களுக்கு ஊட்டுவதற்கு அவன் ஒருபோதும் தயங்கியதும் கிடையாது, தவறியதும் கிடையாது.” 'இங்ங்னமாகப் பிறப்பிலேயே வாழ்வுக் கதியை வகுத்துவிட்ட சிவன், ஆதிபரம்பொருள் ஆவான். அவன், என்றும் உள்ளவன்; அவன் செத்துவிடவில்லை; அவன் வகுத்த நி...
சைவ  சித்தாந்தம் அறிமுக உரை ========================== இது சைவ சித்தாந்தத்திற்கான அறிமுக பதிவு. வேதம் என்பது ஆரியர்களின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதத்தை குறிப்பிட்டாலும், ஆரியர்களே ஏற்று கொண்ட இன்னொரு வேதம் சைவ திருமுறை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். ஆனால் அதை தமிழ் வேதம் என்று சொல்லாமல் திராவிட வேதம் என்று சொல்லிவிட்டார்கள். நாம் தமிழ் வேதம் என்றே சொல்வோம். சைவ சித்தாந்தம் என்பது தமிழ் சைவ வேதத்திற்கு பின்னால் தோன்றியது. சமயத்தில் வேதத்தின் மூலமாக அந்தத்தை(இறைவன்) அடைதல் வேதாந்தம் சித்தத்தின் மூலமாக அடைதல் சித்தாந்தம். சித்தம் என்றால் அறிவு. சமயத்தில் பகுத்தறிவு பேசியது சித்தாந்தம். சமயத்தில் பகுத்தறிவா என்பது உங்களுக்கு வியப்பை தரலாம். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். வேதாந்தம் என்ன கூறுகிறது என்றால்   இந்த உலக உயிர்கள் அனைத்தையும் படைத்தவன் இறைவன். அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில் உள்ள பாடல் பின்வருமாறு பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே உ...