ஒளவையார் விநாயகர் பூசை செய்து கொண்டிருந்த பொழுது சேரமான் பெருமாள் குதிரை மீதேறியும் சுந்தரர் யானை மீதேறியும் கயிலாயம் புறப்படும் செய்தி அவருக்கு கிடைத்தது. ஒளவையாருக்கு தாமும் அவர்களுடன் கயிலாயம் போக வேண்டும் என்று பூசையை விரைவாக செய்ய தொடங்கினார். ஒளவையாரின் எண்ணத்தை அறிந்த விநாயகர், ஒளவையே! அவசரம் ஏதும் வேண்டாம் அவர்களுக்கு முன்னதாகவே உன்னைக் கயிலாயத்தில் சேர்த்து விடுகின்றேன் என்றார். விநாயக பெருமானின் அருளினை நினைந்து "சீதக்களபம்' என்னும் விநாயகர் அகவலைப் பாடினார்.தமிழ் உவக்கும் பிள்ளையார் பெருமானும் அதனைக் கேட்டு மகிழ்ந்து வாக்களித்தபடியே அவரைத் தன் துதிக்கையால் எடுத்துக் கைலாயத்திற் சேர்த்து விட்டார். சேரமான் பெருமாள் மற்றும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் கைலாயம் வந்து சேர்ந்தனர். தம்முடன் ஒளவையாரும் வந்தாரில்லையே என்ற ஏக்கம் அவர்களுக்குள்ளே இருந்தது.ஆனால் தங்களுக்கும் முன்பாகவே அங்கே வந்ததிருந்த ஒளவையாரைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எங்கட்கு முற்பட நீங்கள் வந்து சேர்ந்தது எவ்வாறோ? என்று கேட்டான் சேரன். அப்போது, அவனுக்கு ஒளவையார் சொன்னதாக வழங்குவது இந்தச் செய்யுள்
மதுர மொழி நல் உமையாள் சிறுவன் மலர் அடியை
முதிர நினைய வல்லார்க்கு அரிதோ முகில் போன்று முழங்கி
அதிர வருகின்ற யானையும் தேரும் அதன் பின்வரும்
குதிரையும் காதம் கிழவியும் காதம் குல மன்னனே
மது - தேன்(மதுர - இனிய),
முதிர - உறுதியாக,
முகில் போன்று முழங்கி - இடி
காதம் - கூப்பிடு தூரம் (தூரம் அளக்கும் அளவு)
சேரர் குடியாகிய உயர்குடியிலே தோன்றிய மன்னனே! இனிதான சொற்களைக் கூறுகின்ற நன்மையைத் தருகின்ற உமை அம்மையின் குமாரன் விநாயகப் பெருமான். அவனுடைய திருவடித் தாமரைகளை அழுத்தமாக நினைந்து தமக்குரிய பற்றுக்கோடாகக் கொள்வதற்கு வல்லமையுடையவர் யாம். எமக்கு, உமக்கு முன்பாக இவ்விடம் வந்து சேர்தலும் அரிதாகுமோ? மேகத்தின் இடி முழக்கத்தினைப் போல முழங்கிக் கொண்டு, தாம் நடக்கும் நிலமும் அதிரும்படியாக நீங்கள் வந்த யானையும், தேரும், அதன் பின்னாகவே வந்து கொண்டிருந்த குதிரையும் எல்லாம் ஒரு நாழிகைக்கு காத வழி நடந்தால், வழி நடக்கவியலாத இந்தக் கிழவியும், கணபதியின் கருணையால் காத வழி கடந்து விடுவாள் என்பதனை அறிவாயாக என்பது பொருள். 'முதிர நினைய வல்லார்க்கு’ என்றதால், அவர்களிடம் அத்தகைய அன்பின் முதிர்ச்சி நிலைபெறவில்லை என்றும், அதனாலேயே அவர்கள் தாம் முன்னாக வந்ததற்கு வியந்தனர் என்றும் கூறினார்.

Comments
Post a Comment