சைவ சித்தாந்தம் அறிமுக உரை ========================== இது சைவ சித்தாந்தத்திற்கான அறிமுக பதிவு. வேதம் என்பது ஆரியர்களின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதத்தை குறிப்பிட்டாலும், ஆரியர்களே ஏற்று கொண்ட இன்னொரு வேதம் சைவ திருமுறை மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகும். ஆனால் அதை தமிழ் வேதம் என்று சொல்லாமல் திராவிட வேதம் என்று சொல்லிவிட்டார்கள். நாம் தமிழ் வேதம் என்றே சொல்வோம். சைவ சித்தாந்தம் என்பது தமிழ் சைவ வேதத்திற்கு பின்னால் தோன்றியது. சமயத்தில் வேதத்தின் மூலமாக அந்தத்தை(இறைவன்) அடைதல் வேதாந்தம் சித்தத்தின் மூலமாக அடைதல் சித்தாந்தம். சித்தம் என்றால் அறிவு. சமயத்தில் பகுத்தறிவு பேசியது சித்தாந்தம். சமயத்தில் பகுத்தறிவா என்பது உங்களுக்கு வியப்பை தரலாம். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். வேதாந்தம் என்ன கூறுகிறது என்றால் இந்த உலக உயிர்கள் அனைத்தையும் படைத்தவன் இறைவன். அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில் உள்ள பாடல் பின்வருமாறு பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே மாத்தவளே உ...
கடை எழு வள்ளல்களில் ஒருவனான பாரி சேர சோழ பாண்டிய மன்னர்களால் கொல்லப்பட்டான். அவன் மகள்களான அங்கவை மற்றும் சங்கவை இருவருக்கும் திருமணம் முடித்து வைக்க வேண்டிய பொறுப்பு ஒளவைக்கு ஏற்பட்டது. மூவேந்தர்களுக்கு பயந்து இத்திருமணத்தில் யாரும் பங்கு கொள்ளாமல் இருந்தனர். திருமண ஓலை எழுதுவதற்கு ஆள் தேவை பட்டது. யாரும் எழுத வராததால் விநாயகரை அழைத்தார் ஒளவையார்.விநாயகர் எல்லாம் வருவாரா என்று ஒருவர் கேலி செய்ய அப்பொழுது எழுதிய செய்யுள் ஒரு கை இரு மருப்பு மும் மதத்து நால் வாய்க் கரி உருவக் கங்காளன் செம்மல் - கரி முகவன் கல்யாண ஓலை கடிது எழுத வாரானேல் தன் ஆண்மை தீர்ப்பன் சபித்து ஒரு கை - தும்பிக்கை இரு மருப்பு - யானை தந்தங்கள் மும்மதம் - சைவம், சாக்தம், கணபாத்யம் ஆகிய மூன்று மதங்களுக்கும் பொதுவானவர் நால் - நான்ற - தொங்குகின்ற கரி - யானை கரி முகவன் - யானை முகத்தோன் கடிது - விரைந்து இப்பாடலில் ஒன்றில் இருந்து நான்கு வரை ஒரே வரியில் விநாயகரை வர்ணிப்பது ஒளவையின் திறமைக்கு சான்றாகும். பாடலின் பொருள் இதுவாகும். ஒற்றைக்கையும், இரட்டைக் கொம்புகளும், மூன்று மதங்களும்...